7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அரசாணை முதல்வருக்கு பழ. நெடுமாறன் பாராட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 11:01

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவராகும் கனவினை நிறைவேற்றும் வகையில் 7.5சதவீதம் உள் ஒதுக்கீடு அளிப்பதற்கான அரசாணையை அரசியல் சட்டம் 162ஆவது பிரிவின்படி வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்.

 

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 7.5சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் 45 நாட்களுக்கு மேலாகக் காலம் கடத்திஆளுநர் வேறு வழியே இல்லாமலும் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கவும் கிடப்பில் போடப்பட்டிருந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதை முதலிலேயே செய்திருந்தால் அவருக்கு இத்தகைய நிலை வந்திருக்காது.

செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2020 14:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.