முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு - அழைப்பிதழ் அச்சிடுக
சனிக்கிழமை, 19 அக்டோபர் 2013 16:01
தமிழ் இன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத, மறக்கக் கூடாத பேரவலம் - முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலை! முள்ளிவாய்க்காலில் பணியாது நின்ற எம் தமிழரின் வீரத்தையும், கொத்து கொத்தாக அவர் கொன்றழிக்கப்பட்ட கொடூரத்தையும், அவர்களுக்காக உயிராயுதம் ஏந்திய முத்துக்குமார் உள்ளிட்ட ஈகிகளின் உருவங்களையும் வருங்கால தலைமுறையினருக்கும் என்றும் நினைவூட்டும் வகையில் காலம் கடந்து நிற்கும் வண்ணம் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களாக்கி எழும்பி நிற்கிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம!

அம்முற்றத்தின் திறப்பு நிகழ்வு, கொண்டாட்ட விழா அல்ல! இனத்திற்கு ஏற்பட்ட அழிவை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து தொடர்ந்து போராடத் தூண்டும் எழுச்சி நிகழ்வு!
 
தலைவர்கள், தமிழறிஞர்கள், திரைத்துறைக் கலைஞர்கள், மாணவர்கள் என ஈழத்துக்காய் நிற்கும் சான்றோர் இணைந்து பங்கு பெறும் மாபெரும் நிகழ்வு!
உலகெங்கிலும் இருந்து தமிழர்கள் வருகிறார்கள்!

கரம் கோர்ப்போம்! போராடுவோம்! தமிழீழம் வெல்வோம்!

முதல் நாள் -

8-11-2013, வெள்ளிக்கிழமை மாலை 4 மணி

முத்துக்குமார் திடல், பாலச்சந்திரன் அரங்கம்

இசை நிகழ்வுகள்

தமிழக தலைவர்களின் சிறப்புரை

 

இரண்டாம் நாள் -
9-11-2013, சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை
மாணவர் அரங்கம், மகளிர் அரங்கம், பாவலர் அரங்கம், அறிஞர் அரங்கம்
தமிழக தலைவர்கள் சிறப்புரையாற்றும் பொது அரங்கம்
 
மூன்றாம் நாள் -
10-11-2013, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை
உலகத் தமிழர் பேராளர்கள் பங்குபெறும் உலகத் தமிழர் அரங்கம்
அறிஞர் அரங்கம், பிற மாநிலத் தமிழர் அரங்கம்
திரைத் துறை அரங்கம்
தமிழக தலைவர்கள் சிறப்புரையாற்றும் பொது அரங்கம்


Page-01

 

Page-02

 

 

Page-03

 

 

Page-03

 

 

Page-03

 

 

Page-03

 

 

Page-03

 

 

Page-03