செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இழிவுபடுத்தும் முயற்சி! பழ. நெடுமாறன் கண்டனம்! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 04 டிசம்பர் 2020 12:34

மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றி, அதனுடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்தது பற்றி ஆராய்வதற்காக, ஒரு குழுவினை மத்திய அரசு நியமித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சுதந்திரமான செயல்பாட்டினை இது தடுத்துவிடும்.

 

 

இந்திய மொழிகளில் மிக மூத்த மொழியான தமிழை இழிவுபடுத்தும் இந்த முயற்சியை உடனடியாகக் கைவிடுமாறு மத்திய அரசை வற்புறுத்துகிறேன்.