சையத் அலி ஷா கிலானி கைதுக்கு பழ. நெடுமாறன் கண்டனம் அச்சிடுக
சனிக்கிழமை, 01 மே 2010 18:47
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கொடுத்துள்ள அறிக்கை
அகில் இந்திய ஹுரியத் மாநாடு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி அவர்கள் நேற்று ஜம்முவில் மத்திய காவல்படையினர் கைது செய்து அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எண்பது வயதைத் தாண்டிய முதிய தலைவரான கிலானியை சட்டத்திற்கு புறம்பான வகையில் கைது செய்ததும் அவரது குடும்பத்தினருக்குக் கூடத் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருப்பது அடாவடித்தனமானச் செயலாகும்.
காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் முதிய தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறேன்.