பரமக்குடி கலவரம் - நீதி விசாரணை வேண்டும்! - பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 19:17 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : பதற்றம் நிறைந்த பகுதியான பரமக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நடைபெற்றிருக்கும் வன்முறை நிகழ்ச்சிகளும் துப்பாக்கிச்சூடும் அனைவருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.
இது மேலும் மேலும் வளர்ந்து சாதிக் கலவரங்களாக உருவாகிவிடாமல் தடுக்கப்பட வேண்டும். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். |