ஐ.நா. தீர்மானம் இந்தியா ஆதரிக்க வேண்டும் - முதல்வரின் நிலைப்பாட்டிற்கு பழ. நெடுமாறன் பாரட்டு |
![]() |
புதன்கிழமை, 07 மார்ச் 2012 20:00 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வற்புறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் செயலலிதா இரண்டாம் முறையாக கடிதம் எழுதியிருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பான தீர்மானம் முதல்வரால் முன்மொழியப்பட்டு அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போதும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்று ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இந்தியா நடந்துகொள்ள வேண்டும் என மீண்டும் வற்புறுத்துகிறேன். |