அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குக மத்திய அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்! அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2013 14:16
டீசல் விலையேற்றத்தின் விளைவாக பொருட்களின் விலைவாசி மட்டுமல்ல போக்குவரத்து கட்டணமும் உயரும்.
குறிப்பாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு டீசல் விலை ஏற்றத்தின் விளைவாக ஆண்டிற்கு சுமார் 1000 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படும். பொது மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாவார்கள். எனவே டீசல் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு முன்வரவேண்டும் அல்லது அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்படும் டீசல் மானிய விலையில் அளிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் சிமெண்ட், சர்க்கரை போன்றவற்றை மத்திய அரசு மானிய விலையில் கொள்முதல் செய்கிறது. தமிழ்நாட்டிருந்து மானிய விலையில் இவற்றைப் பெறுகிற மத்திய அரசு அதைப்போல அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அளிக்கிற டீசலை மானிய விலையில் அளிக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வ-யுறுத்திப் பெறுமாறு தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.