சர்வதேச விசாரணை வேண்டும் பழ. நெடுமாறன் வேண்டுகோள் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013 14:27
சர்வதேச விசாரணை வேண்டும் பழ. நெடுமாறன் வேண்டுகோள்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
ஆங்கில நாளிதழ் ஒன்றில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்னும் 12 வயது சிறுவன் சிங்கள இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு மிக நெருக்கத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் படங்கள்
வெளியாகியுள்ளன. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் சிங்கள இராணுவம் எத்தகைய கொடூரங்களைப் புரிந்துள்ளது என்பதையும் பல ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் இதைப்போல படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தப் படம் சான்றாக விளங்குகிறது. இது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் சர்வதேச அளவில் விசாரணைக் குழுவை அமைத்து முழுமையாக விசாரித்தால் ஒழிய உண்மைகள் வெளிவராது. மார்ச் மாதம் கூடவிருக்கிற இந்த ஆணையம் உடனடியாக அதைச் செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறேன்.