தமிழறிஞர் நெடுஞ்செழியனை உடனே விடுதலை செய்க! அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00

http://thenseide.com/images/Nedunchezhian.jpgபொய் வழக்குப் போட்டு - என்
புகழையெலாம் தேய்த்துக்
கைவிலங்கு மாட்டி - எனைக்
கடுஞ்சிறையில் பூட்டி


வெங்கொடுமை செய்தாலும், நான் வீழ்ந்துவிட மாட்டேன் என்ற உறுதியோடு, தவை தாழாது நிற்கும் பேராசிரியர், தமிழறிஞர் நெடுஞ்செழியன், கடந்த ஓராண்டிற்கும் மேலாகக் கன்னடக் கொடுஞ்சிறையில் வாடுகின்றனர்.

பொய்வழக்கில் கைது செய்து, சிறையிலும் பொது வகுப்பில் அடைத்து வைத்து, பிணையும் வழங்காமல், பெரும்பழியைச் சுமக்கிறது கன்னட அரசு.

உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும், தமிழர் அமைப்புகளும் இப்போது ஒருங்கிணைந்து கொடுக்க வேண்டிய ஒரே குரல்

“பேராசிரியர் நெடுஞ்செழியனை

உடனே விடுதலை செய்க