சத்தமே இல்லாமல்... - தமித்தலட்சுமி தீனதயாளன் |
|
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:23 |
கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் நினைவாக தந்தைக்குள்ளே தாயாகி தாலாட்டு பாடினாய்! சிந்தையெல்லாம் தமிழாகி கவிதை கூட்டினாய்!
எளிமையே வலிமையென்று வழக்கம் காட்டினாய்! புலமையோடு தமிழ்பாடி மயக்கம் ஊட்டினாய்! வித்தக விரல்களிலே புத்தகங்கள் மீட்டினாய்! சத்தமே இல்லாமல் - ஏன் நீ சாவைத் தேடினாய்! |