மு. பாலசுப்பிரமணியம் மறைவு அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017 16:41

தமிழர் தேசிய முன்னணயின் மூத்தத் துணைத் தலைவரும் கொங்கு மண்டல மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றவருமான மு. பாலசுப்பிரமணியம் காலமான செய்தியறிய மிக வருந்துகிறோம்.

6-4-2017 அன்று சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார். செய்தியை அறிந்ததும் தலைவர் பழ.நெடுமாறன், மாநில இளைஞரணி அமைப்பாளர் கா. தமிழ்வேங்கை, சேலத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு கட்சித் தலைவர்களும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சாரி சாரியாக வந்து அவருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

அவரது உடல் பிற்பகல் ஊர்வலமாக மின் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் பின்தொடர்ந்து சென்று இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

தமிழர் தேசிய முன்னணி மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பு ஆகியவற்றில் பொறுப்பான பதவிகள் வகித்து அவர் ஆற்றிய பணி என்றும் மறக்க இயலாததாகும். அவரது பிரிவினால் வருந்தும் துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

- ஆசிரியர்