"பெருந்தலைவரின் நிழலில்' நூல் அறிமுக விழா |
![]() |
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:27 |
23-7-17 ஞாயிறு அன்று மதுரை பால்மீனாஸ் மண்டபத்தில் "பெருந்தலைவரின் நிழலில்' நூல் அறிமுக விழா நடைபெற்றது. அனைவரையும் ச. பிச்சைக்கணபதி வரவேற்றார். வெ.ந. கணேசன் தொகுப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு டி.ஆர். சபாபதி தலைமை தாங்கினார். எம்.கே.டி பாலன், எம்.ஆர். மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரா. கு. வேலன் நூல் அறிமுக உரை நிகழ்த்தினார். முதல் நூலை எஸ்.கே. மோகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ஏ.எம். சுப்பிரமணியன், புதூர் அப்துல்லா, எஸ்.எம். செல்லபாண்டி, பு. திரவியம், மருத்துவர் கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, வி.எம். பாண்டியன், கே. ஐடியல் நாகராஜ், கெ. இராமசுப்பு, அருணா சுந்தரராசன், பாக்கியம் தேவர், இரா. கிருஷ்ணவேல் ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர். நூல் திறனாய்வினை இரா. விசயராசன், இரா. ஜெயராமன், க. ஜான்மோசஸ், பி. வரதராசன், பி. சுரேந்திரன், பி.எஸ். கனிராஜ், ச. செளந்தரபாண்டியன் ஆகியோர் செய்து உரையாற்றினர். பழ.நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினர். ச. இராமச்சந்திரன் நன்றியுரை கூறினார். |