கா. பரந்தாமன் நினைவேந்தல் |
![]() |
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:45 |
தமிழர் தேசிய முன்னணியின் மூத்த பொதுச்செயலாளர் கா. பரந்தாமன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 23-7-17 ஞாயிறு அன்று மதுரை பால்மீனாஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அனைவரையும் வெ.ந. கணேசன் வரவேற்றார். எம்.ஆர். மாணிக்கம் தலைமை தாங்கினார். திரு. சி.சி. சாமி, ஜி.எஸ். வீரப்பன், துரை. மதிவாணன், தி. பழனியாண்டி, சி. முருகசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கா. பரந்தாமன் படத்தினை பழ.நெடுமாறன் திறந்து வைத்து உரையாற்றினார். தே. எடிசன்ராசா, க. ஜான்மோசஸ், இரா. விஜயராசன், இரா. ஜெயராமன், நாகை திருவள்ளுவன், பி. வரதராசன், வெற்றிக்குமார், வேலுச்சாமி, இரா. மனோகரன், மீ.த. பாண்டியன், ரெ. இராசு, க. திலீபன், ஐ. வெற்றிச்செல்வன், பழ.பரிதி, ஆசீர்வாதம், நா. கதிரவன், மு. தமிழ்ப்பித்தன் மற்றும் தமிழர் தேசிய முன்னணியின் மாநில நிர்வாகிகள் மாவட்டத் தலைவர்கள் உரையாற்றினர். தி. முருகன் நன்றி கூறினார். |