கூர் தீட்டப்படும் வாள்கள் - கவிஞர் தமித்தலட்சுமி அச்சிடுக
சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 12:45

மந்திகள் கூட்டத்தில்
மலர் மாலையாய்
ஏன் நின்றாய்?

மதியற்றவர்களுக்காக
மரணத்தை
ஏன் சுமந்தாய்?
நீ விட்டுச் சென்ற
கேள்வி
நாளை எம் மாணவர்களின்
வேள்வி!!
நீ இறந்த பின்
சுமந்த தோள்கள்
நாளைய அனிதாக்களுக்காக
கூர் தீட்டப்படும் வாள்கள்!!