தொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்துப் பேச முதலமைச்சர் முன் வரவேண்டும் பழ.நெடுமாறன் வேண்டுகோள் அச்சிடுக
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 12:44

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

தமிழக அரசு போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்கள் கடந்த 3 நாட்களாக செய்துவரும் வேலை நிறுத்தத்தின் விளைவாக பொது மக்களும் மாணவர்களும்  பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறும் மேலும், முன்னறிவிப்பு எதுவும் வழங்காமல் போக்குவரத்து  ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இன்று ஆணைப் பிறப்பித்துள்ளதை வரவேற்கிறேன். 

தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில், வேலை நிறுத்தம் தொடர்வது மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து முதலமைச்சர் இப்பிரச்சினையில் தலையிட்டு தொழிலாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்க முன்வரவேண்டும். தொழிற்சங்கங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.