முரம்பு பாவாணர் கோட்டத்தில் மறைமலையடிகள் விழா |
![]() |
வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018 14:56 |
பாவாணர் பாசறையில் தி.ஆ. 2049- ஆடவை 31- (15-07-2018) ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு மறைமலையடிகள் நூற்றாண்டு விழா வரை நடைபெற்றது. உ.த.க. துணைத் தலைவர் நாகவரசன் புதுவைப் பேரறிஞர் ம.இலெ. தங்கப்பா படத்தினைத் திறந்து நினைவேந்தல் உரையாற்றினார். காரைக்குடி மு. பாரி, சென்னை ஆதிலிங்கம், திருக்குறள் தமிழ் மரபுரை ஆய்வக அமர்வில் பங்கேற்றுப் பேசினர். பாவாணரின் ஆங்கில நூலை - "உலகின் முதல் செம்மொழி" என்னும் பெயரில் அரியலூர் அறிஞர் ம.சோ. வாகையர் (விக்டர்) அறிமுகம் செய்திட "அல்மா" வேலன் (வேலாயுதம்) வெளியிட்டார். பாவாணர் பற்றாளர்கள் 40பேர் பெற்றுக்கொண்டனர். கண்காட்சி நூல் வெளியீடு, ஆய்வரங்கம், வாழ்த்துரையில் புலவர் இருளப்பன், புலவர் சரவணச் செல்வன், முனைவர் சேதுமணி, வங்கி அலுவலர் செ.சா. தேவி உரையாற்றினர். பதின்கவனகத்தை ஆய்வு மாணவர் த. ஈகைச்செல்வன் (திலீபன்) நிகழ்த்தினார். |