ஒடியாவைப் பார்த்து தமிழ்நாடு திருந்துமா? |
![]() |
திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 12:14 |
ஒடியா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வணிக நிலையங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் இரண்டு வாரத்திற்குள் ஒடியா மொழியில் மாற்றப்படவேண்டும். அவ்வாறு மாற்றப்படாத அமைப்புகள் குறித்து பொது மக்கள் புகார் அளிக்கும் வகையில் தனியான இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையை மீறும் நிறுவனங்கள் மீது தண்டமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. |