"சீரழியும் தமிழகம்" - கருத்தரங்கம் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2018 12:21

தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் சென்னையில் 29-09-2018 அன்று மாலையில் சீரழியும் தமிழகம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இக்கருத்தரங்குக்கு தலைமை நிலையப் பொதுச் செயலாளர் செ.ப. முத்தமிழ்மணி தலைமை தாங்கினார். செய்தித்துறைப் பொதுச்செயலாளர் ஆவல்கணேசன் அனைவரையும் வரவேற்றார்.  துணைத் தலைவர் பா. இறையெழிலன் தொடக்கவுரையாற்றினார்.

"தமிழகத்தின் நீர் மேலாண்மை" என்னும் தலைப்பில் தமிழ்நாடு பொறியாளர் சங்கத் தலைவர் அ.  வீரப்பன்  அவர்களும், "சேலம் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு ஏன்?"  என்ற தலைப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன்  அவர்களும், "மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம் ஏன்?"  என்ற தலைப்பில் மீத்தேன் எதிர்ப்பியக்கத் தலைவர் பேரா. த. செயராமன் அவர்களும், "ஸ்டெர்லைட்  ஆலை எதிர்ப்பு ஏன்?"  என்ற தலைப்பில் த.தே.மு.துணைத் தலைவர் கா.  அய்யநாதன் அவர்களும், "நகர்ப்புறச் சீர்கேடுகள்"  என்னும் தலைப்பில் வடமாவட்ட  பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி அவர்களும், "பெட்ரோல்-கெமிக்கல் எரிவாயு ஏன்?" என்ற தலைப்பில் த.தே.மு. பொருளாளர் ம. உதயகுமார் அவர்களும்  உரையாற்றினர். த.தே.மு. தலைவர் பழ. நெடுமாறன் நிறைவுப் பேருரையாற்றினார்.  அனைவருக்கும் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கி. சண்முகசுந்தரம் நன்றியுரை கூறினார்.
இக்கருத்தரங்கினை  நடத்தும் பொறுப்பேற்று வடசென்னை மாவட்டத்  தலைவர் ச. இலாரன்சு, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ப. இளங்கோவன், தென்சென்னை  மாவட்டத் தலைவர் வீ. மு.கோவிந்தன், காஞ்சி மாவட்டத் தலைவர் பெ. சுந்தரசேகர் ஆகியோர் மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.