தேசியம் - மொழி மரபைச் சார்ந்தது-(பழனி மகிழ்நன்) |
![]() |
சனிக்கிழமை, 16 மார்ச் 2019 13:58 |
தேசியம் என்பது மொழிமரபு சார்ந்தது. மதவழிப்பட்டது ஆகாது. "வடவேங்கடம்-தென்குமரி ஆயிடை-தமிழ்கூறும் நல்லுலகு"- என்பது தமிழ்த் தேசியம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது தமிழரின் மானிட நேய உணர்வாகும். இந்தியா பல்வேறு மொழிமரபு இனவழித் தேசியங்களைக் கொண்ட ஒரு கூட்டு நாடு. இந்திய இறையாண்மை கூட்டு இறையாண்மையே தமிழர் தங்களின் நாடு- மொழி- இனம்- கலை- இலக்கியம்-பண்பாடு-நாகரிகம் ஆகிய மரபுவழி உரிமைகளின் -அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத் தமிழ்த்தேசியம் அவசியமாகிறது. தமிழ்த்தேசியம் இயல்பானது, இயற்கையானது. தமிழ்த் தேசியத்தை வலிந்து குறைகூறுகிறவர்கள் இந்தியாவில் உள்ள மற்ற தேசியத்தை குறைகூற முடியுமா? கூறினால் அந்தமொழிவழித் தேசிய இனத்தார் ஏற்பார்களா? |