புதிய குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து! |
![]() |
செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 11:08 |
ஆனால் இந்தியாவில் இன்று பல்வேறு மாநிலங்களில் வாழும் பழங்குடியினரின் நிலை என்ன? நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆயினும் அவர்களில் பெரும்பாலோரின் வாழ்க்கையில் எத்தகைய முன்னேற்றமும் இல்லை. பழங்குடியினரைப் பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டங்கள் செயலற்றுக் கிடக்கின்றன.
பழங்குடியினர் மற்றும் காடுகளில் குடியிருக்கும் மக்களுக்கு அவர்கள் அனுபவித்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்கவேண்டு்ம் என்று வன உரிமைகள் சட்டம் கூறுகிறது. ஆனால்,இந்த மக்களில் இன்னம் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவுரிமைகள் வழங்கப்படவில்லை. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரவு-செலவு திட்டத்தில் 8.5% பழங்குடியினரின் நலனுக்காக ஒதுக்கப்படவேண்டும் என்று நிதி அயோக் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்தப் பரிந்துரை இன்னமும் முற்றிலுமாக நிறைவேற்றப்படவில்லை. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் போதுமான பள்ளிக்கூடங்கள் இல்லை. அதன் விளைவாக அவர்களின் குழந்தைகளின் கல்வி உரிமைப் பறிக்கப்பட்டுள்ளது. பழங்குடியைச் சேர்ந்த இருளர்கள் சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு பல ஆண்டு காலமாக போராடி வருகிறார்கள். இன்னமும் அவர்களுக்கு வழங்கப்படாததால், அந்த இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, போன்றவற்றில் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைப்பதில்லை. பழங்குடியினர் வாழும் காட்டுப் பகுதிகளில் போதுமான மருத்துவமனைகள் இல்லாததால் குழந்தை பேற்றின் போது பெருந் துன்பங்களுக்கும், இழப்புகளுக்கும் அவர்கள் ஆளாகி வருகிறார்கள். காட்டில் இயற்கையாகக் கிடைக்கும் தேன்,, மூலிகைகள் மற்றும் பல பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தும் பழங்குடி மக்களை வனத்துறையினர் துன்புறுத்துவதும், வழக்குகள் தொடுப்பதும் தொடர்ந்து வருகின்றன. பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்தத் தகவல்களின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தாக்குதல்கள் மிகுந்து வருவதைத் தெரிந்துகொள்ள முடியும். பழங்குடியினரை வாட்டி வதைத்து வரும் இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வு எப்போது காணப்படுகிறதோ அப்போதுதான் அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி குடியரசுத் தலைவரானதற்குப் பொருள் இருக்க முடியும். |