பேராசிரியர். பிரபா கல்விமணிக்கு “நம்பிக்கை விருது” |
![]() |
புதன்கிழமை, 15 பெப்ரவரி 2023 12:05 |
11.02.2023 சனிக்கிழமை அன்று சென்னை – கலைவாணர் அரங்கில் ஆனந்த விகடன் இதழின் சார்பில் நடைபெற்ற விழாவில் “நம்பிக்கை விருது” பேரா. பிரபா கல்விமணி அவர்களுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வழங்கினார். தமிழ்வழிக் கல்விக்காகத் திண்டிவனம் உரோசனையில் தாய்த் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கி கடந்த 12 ஆண்டு காலமாக இவர் ஆற்றிவரும் கல்வித் தொண்டு சிறப்பானதாகும். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற நாவுக்கரசரின் வாக்கிற்கேற்ப தனது வாழ்க்கையை மக்கள் தொண்டிற்காக அர்ப்பணித்து அயராது தொண்டாற்றிவரும் பேராசிரியர் பிரபா கல்விமணிக்கு நமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். - ஆசிரியர் |