மறைமலையடிகள் சிலை திறப்பு அச்சிடுக
சனிக்கிழமை, 04 ஆகஸ்ட் 2012 16:30
15-7-12 ஞாயிறு அன்று மாலை 6 மணி அளவில் சென்னை பல்லவபுரத்தில் அமைந்துள்ள மறைமலையடிகளார் இல்லத்தில் அவரது சிலைத் திறப்பு விழா
மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இரா. முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார்.
மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளையின் தலைவரும் மறையடிகளின் பேரனுமான மறை. தி. தாயுமானவன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் துரை.மா. பூங்குன்றன், முனைவர் அருகோ,
பேரா. மறைமலை இலக்குவனார், திருக்குறள் மணி, இறைக்குருவனார் ஆகியோர் உரையாற்றினர். விழா நிகழ்ச்சியை நீலாம்பிகை அம்மையாரின் பேத்தி சொ. கலைச்செல்வி தொகுத்து வழங்கினார். விழாவில் அவர் எழுதிய இரு நூல்களும் வெளியிடப்பட்டன.
அடிகளாரின் சிலையை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்
பழ. நெடுமாறன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இறுதியாக மறை.சு.ம.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.