விடுதலைப் போர் உண்டு! - காசி ஆனந்தன் |
![]() |
சனிக்கிழமை, 15 டிசம்பர் 2012 14:10 |
வீறுடையான் பிரபாகரன் ஈழ விடுதலை யாளனாய் விளைந்த பேறுடையான் இன மானமே உயிராய்ப் பேணும் ஆற்றலான் வலிமை
நூறுடையான் கொடுஞ் சிங்களம் நடுங்கும் தோளினான் விழும்பகை உடலின் நீறுடையான் விடுதலைப் போர் தொடரும்... நிகழும்பார் புலிப்படை வரவே! தாய் நிகர்த்த எழிலார் தமிழ் ஈழம் தலை நிமிர்ந்தெழ இவன் எழுந்தான்! தீயனையான் பிரபாகரன் வீரர் தமிழ்ப்படை திரட்டினான்... நிமிர்ந்தான்! பாய் புலியோ என நாள் தொறும் நூறு பன்னூறு போர்க்களம் இவன் பார்த்தான்! ஆயிரமாய் உயிர் சாயலாம் ஓயுமோ இவன்படை சாயுமோ அம்மா! பொறுத்திருப்பீர்... பிரபாகரன் புலிகள் போர் உண்டு! விரைவில் உண்டு! நிறுத்திய போர் மறுபடியும் நிகழும்! அறத்தின் போர் நிகழும்! நிகழும்! மறுத்துரைப்பார் புலிப் போர்க்களம் காண்பார்! மிகவிரைவில் காண்பார்! காண்பார்! அறுத்தெறிவோம் கை விலங்கை! ஆணை! தமிழீழமீ தானை! ஆணை! |