சுப. வீரபாண்டியனுக்கு 2 ஆண்டு கடுங்காவல். ஆகஸ்டு 20 வரை தண்டனை நிறுத்தி வைப்பு. |
![]() |
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 19:39 |
1995 சூலை 1 அன்று சென்னையில் நடைபெற்ற பாவலரேறு பெருஞ் சித்திரனார் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பொழுது, விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசி யதாக சுப.வீரபாண்டியன் மீது வழக்குத் தொடுக்கப் பட்டது. அவ்வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.3,000/- அபராதமும், பணம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனை யும் விதித்து சென்னை, கைதை, 11-ஆவது நீதி மன்றத்தில் நீதிபதி ஆறுமுகம் 02-08-2002 அன்று தீர்ப்ப ளித்தார். எனினும் மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பாக ஆகஸ்டு 20-ஆம் தேதி வரை தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. |