காணாமல் போன கண்மாய்கள் அச்சிடுக
திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012 13:01
எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வடகிழக்குப் பருவமழை அதிகமாய்ப் பெய்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 31 செ.மீ. மழை பெய்திருக்கிறது. இந்தப் பருவத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையைவிட இது 26 சதவிகிதம் அதிகம் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறுகிறார் கள்.
ஆனாலும் தஞ்சாவூர், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்ட விவசாயிகள் கைகளைப் பிசைந்துகொண்டு இருக் கிறார்கள். காரணம், சம்பா பாயிருக்கு இன்னும் 70 நாட்களுக்கு நீர் வேண்டும். மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. தினம் ஒரு டி.எம்.சி. வீதம் நீர் திறந்து விட்டால் அடுத்த ஒரு வாரத்திற்கே வரும்.
எப்படி சம்பா நெல்லைக் காப்பாற்றி மகசூல் எடுக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை என்று விவசாயி கள் புலம்புகிறார்கள். "இந்த முறை நல்ல மழை பெய்கிறது. ஆனால் இந்த மழையை எங்களால் இப்போது மட்டும் தான் பயன்படுத்த முடியும். மழைநீரைச் சேமித்துவைத்துப் பயன்படுத்த எந்த வசதியுமில்லை. இந்த மழைநீர் வடிவதற் கான சரியான வடிகால்கள் இல்லாத காரணத்தினால் மழைநீர் தேங்கி நின்று பயிர்கள் அழுகும் அபாயமும் உள்ளது'' என்கிறார், திருவாரூர் மாவட்ட விவசாயி கள் சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி.
மத்திய-மாநில அரசுகள் பேசி கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரைப் பெற்றுத் தராதா என்று மீண்டும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட் டார்கள். எவ்வளவு மழை பெய்தாலும் ஏன் இந்த நிலை? நம்மால் மழை நீரை போதுமான அளவு சேமிக்க முடியாதது ஏன்?
"மழை நீரை சேமிக்க நம்மிடம் இருந்த ஆறுகளும் ஏரிகளும் கண்மாய் களும் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளன. முன்பு மழைக்காலத்தில் கண்மாய்களில் சரியான முறையில் மழைநீர் சேமிக்கப்பட்டதால் ஆற்றுப் பாசனத்தை சார்ந்திராத கடைமடைப் பகுதிகளில்கூட விவசாயம் நடை பெற்றன. தமிழ்நாட்டில் இருந்த 39, 200 கண்மாய்களில் 10% கண்மாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், நகரமய மாதல் காரணமாகவும் அழிந்து போய் விட்டன. மொத்தக் கொள்ளளவில் 22%நீரை சேர்த்துவைக்க திறனுள்ள தமிழக கண்மாய்கள் தற்போது 30% தூர்ந்து போயுள்ளதால், 15% மட்டுமே தேக்க முடிகிறது'' என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் இயக்குனரான பழனிச்சாமி.
தொடர்ந்து அவரே, "தமிழகத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மட்டுமே அணைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத் தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் குறைவு என்பதால் புதிய அணைகள் கட்ட வாய்ப்பில்லை. ஆனால், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்மாய்கள் பரவலாக உள்ளன. சிறு மற்றும் குறு விவசாயிகளில் பெரும்பாலானோர் கண்மாய் பாசனத்தைத்தான் நம்பி யுள்ளனர். கிராமங்கள் மட்டுமல்லாமல், நகரங்களிலும் இதே நிலைதான் உள்ளது. நகரங்களில் அதிக அளவு மழை பெய்யும் போது, வடிகாலாக கண்மாய்கள் பயன்பட்டதால் நகரங்கள் வெள்ளப் பாதிப்பிலிருந்து தப்பின. ஆனால், தற்போது நகரங்களில் இருந்த கண் மாய்கள் குடியிருப்புப் பகுதிகளாகவும், பஸ் ஸ்டாண்டுகளாகவும் மாறியதன் விளைவு, சின்ன மழைக்குக்கூட நகர்ப்பகுதிகள் வெள்ளக்காடாகின்றன.
புவி வெப்பமடைந்து வருவதால், உலகின் பல பகுதிகளிலும் பருவ நிலை மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. வரும் காலத்தில் தமிழகத்தில் பருவ மழைக்காலம் குறையும். ஆனால், மழையின் அடர்த்தி 10% முதல் 15% வரை அதிகரிக்கும். அதாவது 42 நாட்களாக இருக்கும் பருவ மழைக்காலம் 32 நாட்களாகக் குறைவது மட்டுமின்றி, நாள் முழுவதும் பெய்யக்கூடிய மழை அளவு, 2 மணி நேரத்தில் பெய்யும். இதனை சமாளிக்க நமது நீர்நிலைகள் தயாராக இல்லையெனில், வெள்ளம் ஏற்படுவதுடன் மழை நீரைச் சேமிக்க முடியாமல் போகும்.
வெப்பம் அதிகரித்து வருவதால், பயிர்களுக்கு அதிக நீர் தேவைப்படும். கிணறுகளை வெட்டி, கிணற்றுப் பாசனம் செய்துவிடலாம் எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால், கால்வாய் களில் இருந்து கண்மாய்களுக்குச் செல்லும் நீரோட்டம் தொடர்ந்தால்தான் நிலத்தடி நீர் அதிகரிக்கும். கிணறுகளில் நீர் கிடைக்கும். மொத்தத்தில் கண்மாய் கள் இல்லையெனில், பல இழப்புகளை சந்திக்க நேரிடும். எனவே, அரசு போர்க் கால அடிப்படையில் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி சீரமைக்க முன்வரவேண்டும்'' என்றார் பழனிச்சாமி.
100 ஆண்டுகளாக தமிழகக் கண்மாய்கள் சங்கிலித் தொடர் அமைப்பு கொண்டிருக்கின்றன. சங்கிலித் தொடரின் முதல் கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்திருக்கும். முதல் கண்மாய் நிரம்பியதும் உபரி நீர், கால்வாய் வழியாக அடுத்த கண்மாயில் பாயும். அந்தந்தப் பகுதிகளில் விழும் மழைநீர் அப்பகுதியில் உள்ள கண்மாய் களில் சேரும். இப்படியாக அமைத்துக் கண்மாய்களிலும் வரிசையாக நீர் நிரம்பி, கடைமடைப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளும் பலன் பெற்றனர். தற்போது கண்மாய்களை இணைக்கும் கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருப் பதால் சங்கிலித்தொடரும் அறுந்து போயுள்ளது.
"முன்பு கண்மாய்களை அந்தந்தப் பகுதி விவசாயிகள் மழைக்காலத்திற்கு முன்பு தூர்வாரும் பழக்கம் இருந்தது. அதற்கு வண்டல்மண் அள்ளுவது என்று பெயர். மழைக்காலத்திற்கு முன்பு கண்மாயில் சேர்ந்துள்ள வண்டல் மண்ணை மாட்டுவண்டிகளில் விவசாயி கள் அள்ளுவார்கள். இதனால், எந்தச் செலவுமின்றி கண்மாய்கள் தூர்வாரப் பட்டன, விவசாயிகளுக்கும் வண்டல் மண் கிடைத்தது. பின்னர், அரசு வண்டல் மண் அள்ளுவதற்கு பல கட்டுப்பாடுகள் விதித்ததால், கண்மாய்கள் கேட்பாரின்றிக் கிடக்கின்றன'' என்கிறார், ஓய்வு பெற்ற நீரியல் மற்றும் வேளாண்மை பொறியாளரான இரா. வேங்கிடசாமி. 1959லிபஹம்ண்ப்ய்ஹக்ன் ம்ண்ய்ர்ழ் ம்ண்ய்ஹழ்ஹப் cர்ய்ள்ற்ழ்ன்cற்ண்ர்ய் ஹcற் லி 1959 என்ற சட்டத்தின் வாயிலாக வண்டல் மண் அள்ளும் செயல்பாட்டில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருப்பதை கடுமையாக எதிர்க்கிறார் இவர்.
"வண்டல் மண் அள்ளச்செல்லும் ஒரு விவசாயி கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், கனிமவளத் துறை அதிகாரி களிடம் அனுமதி பெற்றுத்தான் வண்டல் மண் அள்ளப்பட வேண்டும் என அச்சட்டம் கூறுகிறது. சாதாரண ஒரு விவசாயி. வண்டல் மண் அள்ளுவ தற்காக இத்தனை அரசு அதிகாரிகளிடம் அனுமதி வாங்க முடியுமா?, வண்டல் மண்ணை அள்ளும் ஒரு விவசாயி, அதை தன் நிலத்தை வளப்படுத்த பயன் படுத்துவானே தவிர, வேறு காரியங் களுக்கு பயன்படுத்துவதில்லை. வண் டல் மண் அள்ளுவதில் அன்றே கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தால், தற் போது வரை கண்மாய்கள் தூர்வாரப் பட்டிருக்கும், அரசுக்கும் செலவு குறைந்திருக்கும்'' என்கிறார், இரா. வேங்கிடசாமி.
இது மட்டுமின்றி, 1984ம் ஆண்டு வனத்துறையால் கொண்டுவரப்பட்ட சமூகக் காடுகள் திட்டமும் வண்டல் மண் அள்ள முடியாமல் போனதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. விறகுத் தேவைக்கான மழையில்லாத காலங்களில் கண்மாய்களில் மலை வேம்பு போன்ற மரங்கள் வளர்க்கப் பட்டன. இவை பயன் தர 7, 8 ஆண்டு களாகும். வளர்க்கப்படும் மரங்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக வண்டல் மண் அள்ள, விவசாயிகள் கண்மாயினுள் அனுமதிக் கப்படவில்லை. இதனால், மண் மேவிய கண்மாய்களில் நீர் தேக்கும் அளவும் குறைந்தது. நீர் தேக்கும் அளவு குறைந்த தால், கண்மாய்களில் 5 மாதங்களுக்குக் கூட நீர் தேங்குவதில்லை. இதனால். கண்மாயில் மீன் வளர்க்கும் தொழிலும் குறைந்துவிட்டது. கண்மாயில் மீன் வளர 3, 4 மாதங்களாவது நீர் தேங்கியிருக்க வேண்டும். கண்மாய்கள் நீர் இன்றி கண்ணீர் வடிக்கும் நிலையில் இருப்ப தால், விவசாயிகள் பலர் விவசாயத்தை விட்டு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.
நன்றி : புதிய தலைமுறை 29 நவம்பர் 2012