திருவையாறு-தமிழ்வழிபாட்டுப் போராட்டம் அச்சிடுக
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:17
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் ஐயாறப்பர்-அறம்வளர்த்த நாயகி கோவிலின் குடமுழுக்கினை தமிழில் நடத்த வேண்டும் என தொடர்ந்து ஆர்ப் பாட்டம் பட் டினிப் போராட்டம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. சிவன்வழித் தொண்டர்கள் தமிழர் ஆன்மீக அமைப்பு இந்த இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தி வருகிறது. திருநாவுக்கரசர் தமிழ் வழிபாட்டுரிமையை வென்றெடுக்க நடைபெறும் இந்தப் போராட்டம் பொது மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.