தமிழறிஞர் தங்கப்பாவிற்கு சாகித்திய அகாதமி விருது! அச்சிடுக
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:18
புதுச்சேரி தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா அவர்கள் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததற்காக 2012ஆம் ஆண்டிற்குரிய சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே குழந்தை இலக்கிய நூலுக்கான சாகித்யா அகாதமி விருது 2011ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டது. இருமுறையாக இவ்விருதினைப் பெற்ற தமிழறிஞர் தங்கப்பா ஒருவரேயாகும்.
உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவராக விளங்கும் ம.இலெ. தங்கப்பா அவர்களுக்குக் கிடைத்த இந்தச் சிறப்பு உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. உலகத்தமிழர்களின் சார்பில் அவருக்கு நமது பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.