அறநெறியண்ணல் நூற்றாண்டு விழா அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013 17:12

அறநெறியண்ணல் கி. பழநியப்பனார் அவர்களின் நூற்றாண்டு விழா மதுரையில் மிகச் சிறப்பாக நடந்தது. விழா நடைபெற்ற வர்த்தகச் சங்க அரங்கில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


விழாவினை முனைவர் தமிழண்ணல் தொடக்கி வைத்து உரையாற்றினார். தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன்
கி. பழநியப்பனார் - பிரமு அம்மையார் ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து அறநெறியண்ணலின் திருக்குறள் தொண்டு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் ச. வே. சுப்ரமணியம் அவர்கள் தலைமை யுரையாற்றினார். முனைவர் சாம்பசிவனார், முனைவர் தாயம்மாள் அறவாணன், திருக்குறட் செம்மல் ந. மணிமொழியன், பேரா. மு. குமாரசாமி, முனைவர் வே. தமிழரசு, முனைவர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசி, பேரா. இராசா. கோவிந்தசாமி, புலவர் சுப. இராமச்சந்திரன், புலவர் ஆ. ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
பிற்பகல் 3 மணிக்கு "அறநெறி யண்ணலின் இறைத் தொண்டு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு பேரூர் ஆதினம் இளைய அடிகள் தவத்திரு. மருதாசல அடிகளார் தலைமை தாங்கினார். ஈரோடு தங்க. விசுவநாதன், பேரா. மறை. தி. தாயுமானவன், முனைவர் சோ. ஈ. சூரியமூர்த்தி, முனைவர் நெல்லை ந. சொக்கலிங்கம், சிவசீலர் சி. சு. கோவிந்தசாமி, புலவர் நீ, சீ. சுந்தரராமன், முனைவர் மும்தாஜ் பாலகிருட்டிணன், அருட்சகோதரி ஹெர்மினா ஆகியோர் உரையாற்றினர்.

alt
மாலை 5 மணிக்கு "அறநெறி யண்ணலின் தமிழ்த் தொண்டு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு முனைவர் அறவாணன் தலைமை தாங்கினார். முனைவர் இராம. சுந்தரம், முனைவர் கு. வேலன், திரு.
மகா. சோமாஸ்கந்தமூர்த்தி, சைவநெறி திரு. காந்தி, முனைவர் கோ. வீரமணி, திரு. பொ. தி. இரா. கமலவிசயராசன், திரு. செ. திருமாவளவன், திருமதி. தமித்தலட்சுமி தீனதயாளன், முனைவர் யாழ் சு. சந்திரா, முனைவர்
அ. அருணகிரி, திரு. ச. பிச்சைகணபதி, திரு. வெ. ந. கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.
மாலை 7 மணிக்குத் தொடங்கிய பொதுக் கருத்தரங்கிற்கு கவிஞர் காசி. ஆனந்தன் தலைமை தாங்கினார். ம.தி. மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, திருமதி. ம.பொ.சி. மாதவி பாஸ்கரன், தஞ்சை
அ. இராமமூர்த்தி, திரு. பெ. மணியரசன், சட்டமன்ற உறுப்பினர் இரா. அண்ணாதுரை, இரா. ஜோதிராம், மதுரை முன்னாள் மேயர் பெ. குழந்தைவேலு, திரு. பி. வரதராசன், திரு. நா. ஜெகதீசன், திரு. க. ஜான்மோசஸ், திரு. தே. எடிசன் ராசா, திரு. மு. பாண்டியராசன், மரு. இராமச்சந்திரன், திரு. சு. பழநிக் குமாரசாமி, திரு. கா. பரந்தாமன், திரு. என். சந்திரசேகரன், திரு. எம். ஆர். மாணிக்கம், திரு. இரா. ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வுக் கான ஏற்பாடுகளை திரு. எம். ஆர். மாணிக்கம், திரு. பிச்சை கணபதி, திரு. பி. வரதராசன், புலவர் சுப. இராமச் சந்திரன், திரு. வெ. ந. கணேசன் ஆகி யோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.