"தமிழ்த் தொண்டில் சிறந்து விளங்கியவர் பழநியப்பனார்'' என்று புகழாரம் சூட்டினார் தமிழறிஞர் தமிழண்ணல். |
![]() |
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013 13:40 |
மதுரை வர்த்தக சங்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் தந்தை அறநெறியண்ணல் கி.பழநியப்பனார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழண்ணல் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது:
"அறநெறியண்ணல் பழநியப்பனார் 70 ஆண்டுகளுக்கு முன்னர்'', திருவள்ளுவர் கழகத்தை உருவாக்கி, வடக்காடி வீதியில் கட்டடம் அமைத்து, ஒவ்வொரு நாளும் அங்கு திருப்பணிக்கு ஏற்பாடு செய்தது அவரது வாழ்நாளின் மிகச் சிறந்த அறப்பணியாகும். தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்து அது மேலோங்கி வளர்வதற்கு அரும்பாடுபட்டவர் அவர். அவர் எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்பவர். "ஆகாஷவாணி' என வானொ நிலையத்துக்கு மத்திய அரசு பெயர் வைத்தபோது, அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், "அகில இந்திய வானொ நிலையம்' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வயுறுத்தினார். இந்த பெயர் மாற்றம் நிகழும் வரை வானொயில் பேச மறுத்தார் பழநியப்பனார். இதற்கு கி.ஆ.பெ. விசுவநாதனும் ஆதரவு கொடுத்தார். |