முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற முதலாண்டு நிறைவு விழா அச்சிடுக
புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014 14:48

31-08-2014 ஞாயிற்று மாலை 3 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு விழாக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் நிர்வாகிகள், முற்றத்தின் அறங்காவலர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிர்வாகச் செயலாளர் கென்னடி விழா வரவு-செலவு கணக்கையும் கடந்த 10 மாதங்களுக்கான வரவு-செலவு கணக்கையும் அளித்துப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்த அறிக்கை ஒன்றினை அளித்து முற்றத்தின் தலைவர் பேரா. பெ. இராமலிங்கம் பேசினார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முதலாவது நிறைவு விழாவினை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்குமாறு அனைவரையும் பழ.நெடுமாறன் வேண்டிக்கொண்டார்.

அதையொட்டி பேசிய பலரும் பலவேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்கள்.
நவம்பர் இறுதிவாரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற முதலாண்டு நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது முடிவு செய்யப்பட்டது.