பேராசிரியரின் பெருமிதம் |
![]() |
திங்கட்கிழமை, 04 மே 2015 14:33 |
கோவை பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் பழநிக்குமணன் படித்தபோது அவருக்கு பேராசிரியராக இருந்த ஆர். நடராசன் தனது மாணவன் புலிட்சர் விருதுபெற்ற செய்தியை அறிந்தபோது அளவற்ற மகிழ்ச்சியுடன் பின்வருமாறு கூறினார்:
"பொதுவாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் மிக்க பணிவுடன் நடந்துகொள்வார்கள். ஆனால் பழநிக்குமணன் பணிவுடன் நடந்துகொண்டது மட்டுமல்ல, நண்பனாகவும் நெருங்கிப் பழகினார். எப்போதும் வேடிக்கையும் விளையாட்டுமாக இருந்தாலும் படிப்பைப் பொறுத்தவரையில் மிகுந்த கவனம் செலுத்திவந்தார். புலிட்சர் விருதினைப் பெற்றதின் மூலம் தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக எங்கள் கல்லூரிக்கும் அளவற்ற பெருமையைத் தேடித்தந்திருக்கிறார். |