தில்லைக் கோயிலை அரசே மேற்கொள்ள தனிச்சட்டம் இயற்றுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அச்சிடுக
புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:16

26/07/2015 மாலை 3 மணி முதல் 6 மணி வரை சிதம்பரம் நகரில் காந்தி சிலைக்கு அருகே தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் பானுமதி, அய்யநாதன்,பா. இறையெழிலன் பொதுச்செயலாளர்கள் சி. முருகேசன், ந.மு. தமிழ்மணி, சதா. முத்துக்கிருட்டிணன், லெ. மாறன், கண். இளங்கோ, ஆவல். கணேசன் பொருளாளர் தமிழ்ப்புலி சாத்தப்பன், மாநில இளைஞரணிஅமைப்பாளர் தமிழ்வேங்கை, மகளிரணி அமைப்பாளர் சாய்ரா. புதுச்சேரி மாநில தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ம.இலெ. தங்கப்பா, விழுப்புரம் மாவட்டத் தலைவர் இளங்கோ, திருவாரூர் மாவட்டத் தலைவர் மரு. பாரதி செல்வன், தஞ்சை மாவட்டத் தலைவர் வைத்தியநாதன் :-- முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் வி.வே. சாமிநாதன் இந்த ஆர்ப்பாட்டத்தினை தொடக்கி வைத்தார். பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். கி.செ. பழமலை. பெ. மணியரசன், சுப. இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ந.மு. தமிழ்மணி முழக்கங்களை முன்மொழிய அனைவரும் வழிமொழிந்து முழக்கமிட்ட காட்சி மக்களை கவர்ந்தது. திரளான மக்களும் அங்கு கூடியிருந்தனர்.

இக்கூட்டத்தில் வைத்தியநாதன், கி.செ. பழமலை, இளங்கோ, தங்கப்பா, பானுமதி, அய்யநாதன், சி. முருகேசன், சுப. இளவரசன், பெ. மணியரசன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக பழ.நெடுமாறன் பேசினார்.