எலிகள் கொழிக்கும் வீடு - பச்சியப்பன் |
![]() |
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00 |
"புடிச்சு வச்சா புள்ளையாரு இல்லன்னா, அது வெறும் சாணி” சொல்லுக்குள் ஒளித்து வைத்தார்கள் மரியாதையும் மரியாதை நிமித்தமும் சாணிப்பிள்ளையார் நாற்றங்கால் சனிமூமூலையில் அருகு சூடிப்பின் தண்ணீரில் மிதந்து மண்ணாய்ப் போவார் பொன்னேர் உழவை வேடிக்கை பார்க்கும் தும்பை சூடிய சரளைக்கல் பிள்ளையார் குளம்பு மிதிபடக் கலப்பையில் புரளுவார் வீடோ கிணறோ விரல்களணைத்துப் பிறந்த மஞ்சள் பிள்ளையார் மண்குவியலுக்குள் ஒளிந்து கொள்வார் பக்கத்து வீட்டுக் குழந்தை போல்தான் தூக்கி வளர்த்தோம் வளர்ந்து நிற்கிறது நம்தெருமுனையில் நமைக் காவு வாங்க தொடக்கம் என்று பிள்ளையார் சுழி போட்டால் நமக்கே முடிவு சொல்கிறது விளைச்சலைத் தின்று கொழிக்கும் எலிதான் பிரிய வாகனமாம் கதிர்களைப் பதுக்கும் எலிகளின் பொந்து நவீன வடிவில் அக்ரஹாரம் ஆயிற்று நமது வரப்பில் தோண்டப்பட்ட வளைகள் வயலின் நீரை திருடும் சாத்திரங்கள் ரத்தம் குடிக்கும் சைவப் பிள்ளையார் கதை கட்டப்படுகிறார் பால் குடிப்பதாக. பிள்ளையார் ஊர்வலம் போன தெருக்களில் மறுநாள் நடக்கிறது சவ ஊர்வலம் எலி சுமந்த தொந்திப் பிள்ளையார் இப்போது பார்த்தால் எலிகள் சுமக்கிறார் ஞானப்பழம் ஏமாற்றிய பிள்ளையாரின் எலிகள் பாரதம் சுவைக்கப் பழகிக் கொண்டன எப்போதும் போல் காரியம் முடிந்தவுடன் கடலில் கரைத்துவிட்டு எலிகள் யாவும் அனுமாராகின்றன |