புதுச்சேரியில் தமிழகத் திருநாள் பொதுக்கூட்டம் அச்சிடுக
வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015 11:53

தமிழர் தேசிய முன்னணி சார்பாக தமிழகத் திருநாள், புதுச்சேரி விடுதலை நாள் விழா புதுச்சேரி, மங்கலலட்சுமி நகர், சூரிய விசயகுமாரி இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலைமாமணி கோவி. கலியபெருமாள் மொழி வாழ்த்துப் பாடினார். த.தே.மு. செயலர் கோ. தமிழுலகன் வரவேற்புரை ஆற்றினார். த.தே.மு. தலைவர் பேராசிரியர், ம.இலெ. தங்கப்பா தலைமையுரை ஆற்றினார். த.தே.மு. துணைத் தலைவர் பெ. பராங்குசம், த.தே.மு. பொருளாளர் தமிழ்மாமணி, துரை.மாலிறையன் ஆகியோர் முன்னிலை உரை ஆற்றினார்கள். முனைவர் நா. இளங்கோ, நவம்பர் 1 இல் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட நாளைப் பற்றியும், முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி விடுதலை நாளைப் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்கள். முடிவில் த.தே.மு. துணைச் செயலர் இளமுருகன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், கலைமாமணிகள் வேல்முருகன், பூங்கொடி பராங்குசம், இலக்கியன், அரங்க.நடராசன் மற்றும். அரங்க. விசயரங்கம், திருநாவுக்கரசு, லுய்சியன், தேவராசு, இரா. தேவதாசு உட்பட 50க்கு மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்