திருத்தம் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:27

"நெஞ்சத்தில் நிழலாடும் தலைவர்கள்' என்னும் தலைப்பில் கல்கி தீபாவளி மலரில் வெளியான கட்டுரையில் நான் கூறியதற்கு மாறான செய்தி வெளியாகியுள்ளது. அதை சரிவர கவனிக்காமல் தென்செய்திலும் அந்தத் தவறு இடம் பெற்றுவிட்டதற்காக வருந்துகிறேன். கீழ்க்கண்டவாறு அதைத் திருத்தி வாசித்துக்கொள்ள வேண்டுகிறேன்.

"தமிழக நிதி அமைச்சர் நெடுஞ்செழியன், அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோரும் வந்திருந்தார்கள். இந்திராவைக் கொன்ற மெய்க்காப்பாளர் சீக்கியர் என்பதால் தில்லி முழுவதும் அவர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கில் அவர்கள் கொல்லப் பட்டார் கள். தமிழ்நாடு இல்லத்திலிருந்து நாங்கள் மூன்று பேரும் இந்திரா வீட்டுக்குச் செல்லத் தயாராக இருந்தோம். அப்போது தில்லிவாழ் தமிழர் ஒருவர், வணக்கம் செலுத்தி, என் கையைப் பிடித்துக்கொண்டார்.

"ஐந்து வருடத்துக்கு முன்பு, தமிழகத்துக்கு வெளியே - குறிப்பாக தில்லியில் வசிக்கும் தமிழர்களைக் காப்பாற்றியது நீங்கள்தான்'' என உருகிய குரலில் சொன்னார். உடனே நாவலர். "இவர் சொல்வது புரிகிறதா? நல்லவேளையாக 1978இல் மதுரையில் இந்திரா காந்தி உயிரை நீங்கள் காப்பாற்றினீர்கள். அங்கு அவருக்கு ஏதாவது நேர்ந்திருந்தால், தில்லியில் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டிருப் பார்களோ'' என்று கவலை தெறிக்கச் சொன்னார். அரசியல்ரீதியாக, நான் அவருடன் மாறுபட்டேனே தவிர, இந்திரா என்றென்றும் என் மனதைக் கவர்ந்த தலைவர்தான்.''