உண்மை விரும்பி காலமானார் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:29

"தமிழீழம் அமையும் வரை சட்டை போடமாட்டேன்'' என்று சூளுரைத்து கடந்த 20 ஆண்டு காலமாக சட்டையில்லாமல் வாழ்ந்து வந்த தோழர் உண்மை விரும்பி அவர்கள் 25-12-2015 அன்று கோவூரில் காலமானார் என்ற செய்தியை அறிய மிக வருந்துகிறோம்.

இடைக்காலத்தில் கண் பார்வையை இழக்க நேர்ந்த போதிலும் ஈழத் தமிழர்களுக்காக நடைபெற்ற மாநாடுகள், போராட்டங்கள் எல்லாவற்றிலும் பங்கேற்ற உண்மை உணர்வாளராகத் திகழ்ந்தார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், சின்னப்பா தமிழர், தணிகை மைந்தன், பன்னீர்செல்வம், இளந்திரையன், மறத்தமிழ்வேந்தன், குழல்மைந்தன், நந்தன் உட்பட திரளான தமிழ் உணர்வாளர்கள் கூடி அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினார்கள்.