ஹென்றி டிபேனுக்கு விருது அம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பு வழங்கியது அச்சிடுக
திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2016 12:06

உலக அளவில் இயங்கி வரும் அம்னெஸ்டி இன்டர்நேசனல் (ஜெர்மனி) என்னும் மனித உரிமை அமைப்பு மனித உரிமைப் போராளி திரு. ஹென்றி டிபேன் அவர்களின் தொண்டினைப் பாராட்டி விருதளித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன் முதலாக இந்த விருதைப் பெறும் பெருமை ஹென்றி டிபேன் அவர்களுக்கு கிடைத்திருப்பது தமிழர்கள் அனை வருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. மனித உரிமைத் தொண்டுக்காக பன்னாட்டு விருது ஒன்றினை ஒரு தமிழர் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

மக்கள் கண்காணிப்பகத்தின் தலைவராக விளங்கும் ஹென்றி டிபேன் அவர்கள் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் பெருமைக்குரியவர் ஆவார். அவரது தொண்டு அளப்பரியதாகும். அவருடைய தொண்டிற்கு எல்லா வகையிலும் துணை நிற்கும் அவரது துணைவியாருக்கும் நண்பர் ஹென்றி டிபேன் அவர்களுக்கும் தமிழ்க்கூறும் நல்லுலகின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.