தமிழ் மொழி கற்பீர்! - அண்ணல் காந்தி அறிவுரை |
![]() |
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00 |
ஆகவே அவர்களுடைய மொழியைக் கவனமாகக் கற்பதில் கடைசி மாதத்தைச் செலவிட்டேன். கற்கக்ஞி கற்க அதன் அழகுகளை மேன்மேலும் நான் உணரலானேன். அது சுவாரசியமும் இனிமையும் நிறைந்த ஒரு மொழி. நான் படித்த வரையில் தமிழர்களிடையே மதிநுட்பமும் அறிவுத்திறனும் விவேகமும் கொண்டவர்கள் பலர் முன்பு இருந்திருக்கிறார்கள். இப்பொழுதும் இருக்கிறார்கள் என்பதைக் கண்டேன். இந்தியாவில் அனைவரும் ஓர் இன மக்களாக வாழ வேண்டுமென்றால் சென்னை மாகாணத்திற்கு வெளியே வாழ்கிறவர்கள் தமிழை அவசியம் கற்றாக வேண்டும் என்று கூறுகிறேன். |