தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு - சூலை 15-இல் தஞ்சையில் நடைபெறும் அச்சிடுக
புதன்கிழமை, 23 மார்ச் 2016 13:45

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு வரவேற்புக் குழு நிர்வாகிகள் மற்றும் மலர்க்குழு, விருதாளர் பட்டியல், தயாரிப்புக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 05-03-2016 சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.

அன்று மாலை 3 மணிக்கு மாநாட்டு வரவேற்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டங்களில் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டது.

1. மறைமலையடிகள் பிறந்த நாளான சூலை 15ஆம் தேதி தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டினை தஞ்சையில் நடத்துதல்.
2. மாநாட்டினையொட்டி மலர் ஒன்றை வெளியிடுதல்.

3. தனித்தமிழ் இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டு தொண்டாற்றிய தமிழறிஞர்கள், கவிஞர்கள், உணர்வாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்துதல் ஆகிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.