களம் கண்ட காமராசர் |
![]() |
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00 | |
1965 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் மூமூண்டது. நேருவின் மறைவிற்குப் பின் இந்தியத் தலைமை பலவீனமாக இருக்கும் எனவே படையெடுப்பின் மூமூலம் மிரட்டிப் பணிய வைக்கலாம் எனப் பாகிஸ்தானின் இராணுவச் சர்வாதிகாரி அயூப்கான் கருதினார். ஆனால் பிரதமர் லால்பகதூர், காங்கிரசுத் தலைவர் காமராசர் ஆகியோர் இணைந்து காட்டிய மன உறுதி உலகைவியக்க வைத்தது. பகைவரைத் திகைக்க வைத்தது.
அதற்குத் தலைவர் செவி சாய்க்காததைக் கண்ட அவர் அப்படியானால் கரும்பச்சை நிறக் கால்சட்டையும், மேல் சட்டையும் அணிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். அது கேட்ட தலைவர் கலகலவென நகைத்தார். என்னை வேஷம் போடச் சொல்லுகிறீர்களா? அது என்னால் முடியாது என மறுத்தார். வேறு வழியின்றிக் காமராசர் சென்ற வண்டியில் படைத் தளபதியும் ஏறிக்கொண்டு போர் முனை சென்றனர். காமராசரைச் சற்றும் எதிர்பார்க்காத வடநாட்டு வீரர்கள் காலாகாந்தி! காலா காந்தி! எனக் கூவி மகிழ்ந்தனர். அவரைச் சூழ்ந்து ஆரவாரித்தனர். தமிழ்நாட்டு வீரர்களுக்கோ பெருமை பிடிபடவில்லை. எல்லோரிடமும் பேசி ஊக்க மூட்டினார் காமராசர். வீரர்களும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வீரர்கள் தங்களின் தணியாத ஆசை ஒன்றைத் தலைவரிடம் வெளியிட்டார்கள். தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் அடங்கிய குழு ஒன்று வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தித்தர வேண்டும் என்பதே அந்த ஆசையாகும். தில்லி திரும்பிய காமராசர் உடனடியாகக் கவியரசர் கண்ண தாசனைத் தொலைபேசியில் அழைத்து வீரர்களின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு கூறினார். தலைவரின் ஆணையை ஏற்றுத் தமிழகக் கலைஞர்கள் போர்முனைக்குப் பறந்து சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி வீரர்களை மகிழ்வித்தனர். இந்தியாவின் வரலாற்றில் அரசுப்பதவி எதிலும் இல்லாத ஒரு தலைவர் நமது உயிரைத் துச்சமாக மதித்துப் போர்க்களம் சென்று திரும்பியது இதுதான் முதலும் கடைசியுமாகும். அவருக்கு முன்போ அவருக்குப்பின்போ யாரும் இவ்வாறு துணிந்து சென்றதில்லை. பிரதமர் லால்பகதூர் நன்றியுணர்வோடு காமராசரைப் பாராட்டினார். அந்த வேளையில் சென்னை ஆபட்ஸ்பரி மாளிகையில் நடைபெற்ற போர்நிதி பெறும் கூட்டத்தில் காமராசரை அருகே வைத்துக் கொண்டு பின்வருமாறு மனந்திறந்து பாராட்டினார். போர்க்களத்தில் நம் வீரர்கள் முன்னேறிக் கொண்டிருப்பதற்கு நமது அரசு எடுத்த முயற்சிகள்தாம் காரணம் என்றால் அதற்குத் தலைவர் காமராசரின் யோசனைகள் முக்கியமாக உதவின. அவர் எனது உடன் பிறவாச் சகோதரர். எனக்கு வழி காட்டியாக விளங்கி என் மூமூலம் நாட்டை நடத்திச் செல்கிறார். பகை முடிக்க அவர் கூறிய யோசனைகள் மிகப் பெரிய அளவில் உதவின என அவர் கூறிய போது பெரும் ஆரவாரம் செய்தனர் மக்கள். |