தமிழர் தேசிய முன்னணி : தேர்தல் விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் அச்சிடுக
திங்கட்கிழமை, 23 மே 2016 12:08

தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் 2016ஆம் ஆண்டுக்கான சட்ட மன்றத் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை சுற்றுப்பயணம் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற சுற்றுப்பயண விவரம்:-

வள்ளியூர்

அணுஉலை எதிர்ப்புப் போராளியான முனைவர் சுப. உதயகுமாரை ஆதரித்து நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 04-05-2016 மாலை பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் பழ. நெடுமாறன், மாநிலத் துணைத் தலைவர் கா. அய்யநாதன், திருவாரூர் மாவட்டத் தலைவர் மரு. இரா. பாரதிசெல்வன் ஆகியோர் உரையாற்றினார்கள். இராதாபுரம் தொகுதியின் வேட்பாளரான திரு. உதயகுமார் அவர்கள் பயணக் குழுவினரை வரவேற்றுப் பேசினார்.

மதுரை

05-05-2016 அன்று மதுரை மாநகர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் கோரிப்பாளையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் வெ.ந. கணேசன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் எம்.ஆர். மாணிக்கம் தொடக்கவுரையாற்றினார். மாநிலப் பொதுச் செயலாளர்களான க. பரந்தாமன், ஆவல் கணேசன், மாநிலத் துணைத் தலைவர் கா. அய்யநாதன், மாநில இளைஞரணி அமைப்பாளர் கா. தமிழ்வேங்கை ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் சனநாயகத்தை வீழ்த்தத் துடிக்கும் இன்றைய மோசமான பணநாயக அரசியல் குறித்து சிறப்புப் பேருரை நிகழ்த்தினார். நகரச் செயலாளர் புதூர் தி. முருகன் நன்றி கூறினார்.

இராமநாதபுரம்

06-05- 2016 அன்று இராமநாதபுரம் அரண்மனை முன்பு சட்டமன்றத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. நாகேசுவரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில இளைஞரணி அமைப்பாளர் க. திருமுருகன் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் கண். இளங்கோ, வழக்கறிஞர் ஆ. டேவிட், கிழக்கு மாவட்டச் செயலாளர் மன்மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் சி. பசுமலை கருத்துரை வழங்கினார். மாநிலத் துணைத் தலைவர் கா. அய்யநாதன், பொதுச்செயலாளர் க. பரந்தாமன், தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இராகுல் நன்றி கூறினார்.

மன்னார்குடி

08-05- 2016 அன்று மன்னார்குடியில் உள்ள பந்தலடி கீழ்ப்புறத்தில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் சமர்ப்பா இசைக்குழுவினரின் அரசியல் இசை நிகழ்ச்சி நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ச. கலைச்செல்வம், மாவட்டத் தலைவர் மரு. இரா. பாரதிசெல்வன், மாநில இளைஞரணி அமைப்பாளர் கா. தமிழ்வேங்கை, மாநிலப் பொதுச் செயலாளர் ஐயனாபுரம் சி. முருகேசன், மாநிலத் துணைத் தலைவர் கா. அய்யநாதன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நிறைவாக தலைவர்
பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. இராஜசேகர் நன்றி கூறினார்.

தஞ்சாவூர்

09-05- 2016 அன்று தஞ்சாவூரில் உள்ள ஆபிரகாம் பண்டிதர் சாலையில் விழிப்புணர்வு பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் சதா. முத்துக்கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் பொன். வைத்தியநாதன் தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி. கரிகாலன், மாவட்டப் பொருளாளர் அ. இருதயராசு, மாவட்டத் துணைத் தலைவர் ரெ. இராவணன், மாவட்டத் துணைச் செயலாளர் உ. லெனின், தஞ்சை மாநகரத் தலைவர் இராம. சந்திரசேகர், மாவட்டத் துணைத் தலைவர் சி.மு. இராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சி. முருகேசன், ஆவல் கணேசன், துணைத் தலைவர்களான கோ. கணேசமூர்த்தி, கா. அய்யநாதன், மாநில இளைஞரணி கா. தமிழ்வேங்கை,திருவாரூர் மாவட்டத் தலைவைர் பாரதிசெல்வன், நாகை மாவட்டத் தலைவர் பேராசிரியர் முரளிதரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நிறைவாக தலைவர் பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார்.

புதுவை

புதுவை மாநில நிருவாகிகள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் நிருவாகிகளின் கூட்டம் 10-5-2016 அன்று பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் அய்யநாதன், பொதுச்செயலாளர்கள் ந.மு. தமிழ்மணி, நெடுமான், மாநில இளைஞரணி அமைப்பாளர் க. தமிழ்வேங்கை ஆகியோரும் கலந்துகொண்டனர். புதுவை மாநிலத் தலைவர் ம.இலெ. தங்கப்பா, துணைத் தலைவர் பெ. பராங்குசம், செயலாளர் கோ. தமிழுலகன், துணைச் செயலாளர், இரா. இளமுருகன், பொருளாளர், துரை. மாலிறையன், கடலூர் மாவட்டத் தலைவர் பழமலை, செயலாளர் பாலு, இளைஞரணி அமைப்பாளர் இலக்கியன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் லலித்குமார், இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.