"பெருந்தலைவரின் நிழலில்' நூல் வெளியீட்டு விழா! காமராசர் தொண்டர்கள் ஒன்றுகூடி புகழுரை! |
![]() |
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2017 14:40 |
18-3-17 சனிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு சென்னை தியாகராயர் அரங்கத்தில் "பெருந்தலைவரின் நிழலில்' நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பா. இறையெழிலன் தொகுப்புரை வழங்கினார். விழாவிற்கு காந்திகிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் என். மார்க்கண்டன் தலைமை தாங்கினார். தெற்குக்கள்ளிக்குளம் தி.த.மா.நா.ச. கல்லூரித் தலைவர் டி.ஆர். சபாபதி முன்னிலை வகித்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். நூலைப் பெற்று ஆ. கோபண்ணா, வீரபாண்டியன், பி.ஏ. சித்திக், அய்யநாதன், புலவர் இரத்தினவேலு, த. மணிவண்ணன் ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு காங்கிரசின் மூத்த தலைவர் குமரி. அனந்தன், தமிழக அரசின் காமராசர் விருதாளர் திண்டிவனம் இராமமூர்த்தி. மதசார்பற்ற சனதா தள தலைவர் பி. முகமது இசுமாயில், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் த. வெள்ளையன் ஆகியோர் நூல் திறனாய்வு உரை நிகழ்த்தினர். |