உலக மகளிர் தின நிகழ்ச்சி - திருச்சியில் கருத்தரங்கம் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018 16:30

உலகமய, மதவாத  அரசியல் சூழலும்
பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் - தீர்வும்
10-03-2018  சனிக்கிழமை  அன்று  திருச்சியில்  தோழர் கெளரி லங்கேஷ் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில்  உலக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற கருத்தரங்கிற்கு வழக்கறிஞர் த. பானுமதி தலைமை  தாங்கினார்.

வழக்கறிஞர்  தமயந்தி அனைவரையும் வரவேற்றார்.  கே.  சுரேஷ், மு. மனோகரன், பே.  கனகவேல், மு.த. கவித்துவன், ம. பொன்னிறைவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் இ. அங்கயற்கண்ணி, ம. லெட்சுமி,  ஓவியா, கொளத்தூர் மணி, நீதிநாயகம் அரி பரந்தாமன், பழ. நெடுமாறன், இரா. நல்லகண்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமரந்தா, பேரா. ந. மணிமேகலை,  சுபத்ரா, மரு. உமாரமணன், முனைவர் இரா. செந்தாமரை ஆகிய சாதனையாளர்களுக்கும், அழகுதேவி, செல்வ கோமதி, திவ்யபாரதி, அனிதா, கலையரசி ஆகிய போராளிகளுக்கும் பாராட்டு வழங்கப்பட்டது. தொடக்கத்தில் சமர்ப்பா  குழுவினரின் கலை  நிகழ்ச்சி  நடைபெற்றது.  அனைவருக்கும் வழக்கறிஞர் கு. பாரதி நன்றி  தெரிவித்தார்.