கொலைக்கும் உதவி - கொலைகாரர்களுக்கும் உதவி அச்சிடுக
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2018 12:29

சிங்கள இராணுவத்துக்கு ஆயுதங்களையும், நிதியையும் அள்ளிஅள்ளித் தந்து ஈழத் தமிழர் படுகொலைக்கு உதவிப் புரிந்த சீன அரசு இப்போது ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன் வந்துள்ளது.  


இலங்கையின் வட-கிழக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவும் வகையில் 30 கோடி டாலர் செலவில் 40 ஆயிரம் வீடுகளை யாழ்ப்பாணத்தில் கட்டிக்கொடுக்க சீன அரசு முன்வந்துள்ளது.
ஏற்கெனவே இலங்கையின் வடக்கு மாநிலத்தில் இந்திய அரசு உதவியுடன் கட்டப்பட்ட 44 ஆயிரம் வீடுகளில் பெரும்பாலானவற்றில் சிங்களர்களே குடியேற்றப்பட்டனர் . இப்போதும் யாழ்ப்பாணத்தில் கட்டும் வீடுகளில் சிங்களவர்களை குடியேற்றும் திட்டத்துடன் இவ்வாறு உதவி செய்ய சீனா முன் வந்துள்ளது.