ஆளுநர் தாமஸ் மன்றோ - நடிகை மர்லின் மன்றோ வேறுபாடு தெரியாத காவல்துறை அச்சிடுக
திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 12:10

விடுதலை புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் சிங்கள விமானக் குண்டு  வீச்சினால் படுகொலை செய்யப்பட்டபோது அதைக் கண்டித்து  2009ஆம்  ஆண்டில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  ஆகியோர் தலைமையில் கண்டன ஊர்வலம் நடத்தியதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டனர்.

திமுக ஆட்சியில் போடப்பட்ட  அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குக்கான குற்றப்பத்திரிகையில் சென்னையில் உள்ள தாமஸ் மன்றோவின் சிலை முன்பாக  இவர்கள் கூடி சட்டத்திற்கு எதிராக ஊர்வலம் சென்றனர் என்று  குறிப்பிடுவதற்கு பதில் மர்லின் மன்றோ சிலைக்கு  முன் கூடி  தடையை மீறினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
தாமஸ்  மன்றோ என்பவர் ஆங்கிலேயர்  ஆட்சிக் காலத்தில் சென்னை  மாநிலத்தின்  ஆளுநராக  இருந்தவர்.  மர்லின் மன்றோ என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற திரைப்பட நடிகையாவார்.  தாமஸ்  மன்றோவுக்கும், மர்லின் மன்றோவுக்கும் வேறுபாடு தெரியாமல் சென்னைக் காவல்துறையினர் வழக்குப் பதிவு உள்ளனர் என்பதையே இந்த குற்றப்பத்திரிகை எடுத்துக்காட்டி மெய்ப்பிக்கிறது.