"பெருந்தலைவர் காமராசர்" விருது பழ. நெடுமாறனுக்கு தமிழக முதல்வர் வழங்கினார் அச்சிடுக
சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2019 12:02

தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் திருநாள்  மற்றும் விருதுகள் வழங்கும் விழா 21-01-2019 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ் ஆட்சிமொழி - பண்பாட்டுத் துறை  அமைச்சர் மாண்புமிகு க. பாண்டியராசன் முன்னிலை வகித்தார். மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், கடம்பூர் ராஜú, . பெஞ்சமின், செங்கோட்டையன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பெருந்தலைவர் காமராசர் விருதினை பழ. நெடுமாறன் அவர்களுக்கு வழங்கும் வகையில் பொன்னாடைப் போர்த்தி தங்கப் பதக்கம்  அணிவித்து விருதினை வழங்கினார்.  
திருவள்ளுவர் விருது முனைவர் அன்வர் பாட்சா, பெரியார் விருது சி. பொன்னையன், அண்ணல்  அம்பேத்கர்  விருது மரு. இராமகுரு,  பேரறிஞர்  அண்ணா  விருது மு.அய்க் கண், மகாகவி பாரதியார்  விருது மா. பாரதி  சுகுமாரன்,  பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் தியாரூ, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது கு.கணேசன், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கலைப்பித்தன் ஆகியோருக்கு முதலமைச்சரால் அளிக்கப் பெற்றன. முதல்வருக்கும் மற்றும் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தாம் எழுதிய 'பெருந்தலைவர் நிழலில்' என்னும் நூலை பழ. நெடுமாறன் வழங்கி நன்றி தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சி  மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா. வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார்.  விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. திரளானவர்கள் பங்கேற்றனர்.