சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ? பாடியது பாவேந்தரா? அச்சிடுக
புதன்கிழமை, 01 மே 2019 12:15

ஷெல்லி-பாரதி-பாரதிதாசன் கட்டுரையில் சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?- என்ற வரிகள் பாரதிதாசன் எழுதியதாகக் கூறப்பட்டுள்ளது.

1961இல் நான் சென்னையில் கல்லூரி மாணவனாக இருந்தபோது இதைப்பற்றி பாரதி தாசனிடமே கேட்டேன்.
 அதற்கு அவர் சொன்னார்-"இது எவனோ எழுதின பாட்டு என் தலைல கட்டிட்டானுக" என்று. இதை எழுதியவர் யாரென்று பின்னால் விசாரித்து அறிந்துகொண்டேன். இதை எழுதியவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த கவிஞர் மு. அண்ணாமலை. இவர் கொஞ்ச காலம் பாரதிதாசனின் மாணவராகப் புதுச்சேரியில் இருந்திருக்கிறார். சென்ற ஆண்டு காரைக்குடியில் இறந்துவிட்டார்.
-கவிஞர் முருகுசுந்தரம், சேலம்-16 - நன்றி - தினமணி - 03-08-1991