மன்னார்குடி மகளிர் கல்லூரி – கிறித்துமசு விழா - பழ. நெடுமாறன் பங்கேற்பு & நாவலர் நூற்றாண்டு விழா அச்சிடுக
திங்கட்கிழமை, 03 ஜனவரி 2022 11:09

மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்சு மகளிர் கல்லூரியில் 23-12-21 அன்று நடைபெற்ற கிறித்துமசு விழாவில் அருட்தந்தை ஜான் மரியா வியானி வாழ்த்துரை வழங்கினார்.

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் விக்டோரியா அனைவருக்கும் இயேசுபிரான் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மாணவிகள் இசை, நடனம், நாடக நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வித்தனர். கல்லூரி ஆசிரியர்களும், மாணவியரும் பங்கேற்றனர்.

----------------------------------------

அ.தி.மு.க. அமைச்சராகவும், மூத்த தலைவராகவும் இருந்து மறைந்த நாவலர்  இரா. நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவரது சிலையைத் திறந்து வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என அறிஞர் அண்ணா கூறியதை செயற்படுத்திய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசியலில் வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதும் முன் மாதிரி செயற்பாட்டிற்கு வழிகாட்டியிருக்கிறார்.