மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது |
![]() |
திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2016 12:12 |
தமிழ்க் கடல் மறைமலையடிகளாரால் திருவள்ளுவர் ஆண்டு 1947 (1916)இல் தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் திருவள்ளுவர் ஆண்டு 2047 (2016)இல் நூற்றாண்டைக் காண்கிறது. இந்த நூற்றாண்டு தொடக்க விழா மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்துவது குறித்து ஆராய தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழ்த் தொண்டர்கள் மற்றும் உணர் வாளர்கள் ஆகியோரின் கலந்தாய்வுக் கூட்டம் 07-02-2016 ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. 150க்கும் மேற்பட்டவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். தனித் தமிழியக்கத்தின் நூற்றாண்டு விழாவினை 2016ஆம் ஆண்டு முழுவதிலும் கொண்டாடுவது குறித்து பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினார்கள். மாநாட்டின் நோக்கங்கள் 1. தமிழ்நாட்டில் ஆட்சிமொழி, கல்விமொழி, உயர்நீதிமன்ற மொழி, வழிபாட்டுமொழி ஆகியவற்றை உடனடியாகச் செயற்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தல். 2. தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு, தமிழக அரசின் வேலை வாய்ப்புகளில் வழங்கப்பட்டுவரும் 20விழுக்காடு ஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காடு ஆக அதிகரித்து, அது உறுதியாக அமல்படுத்தத் தமிழக அரசை வலியுறுத்தல். 3. தமிழில் ஆங்கிலம் உட்பட பிறமொழிக் கலப்பை சட்டரீதியாகத் தடுத்துநிறுத்த தமிழ் அறிஞர்களைக் கொண்ட உயர் அதிகாரக் குழுவை அமைத்தல். 4. தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்திய அரசு அமைப்புகளான தொடர்வண்டித் துறை, விமானத்துறை, அஞ்சல்துறை மற்றும் வருமான வரி உட்பட மத்திய அரசின் துறைகள் அத்தனையிலும் தமிழ் ஆட்சிமொழியாக விளங்கவும், தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகளை அளிக்கவும் வலியுறுத்தல். 5. உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்மொழி, பண்பாடு, நுண்கலைகள் ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கத் தாயகத் தமிழர்கள் துணை நிற்றல். வரவேற்புக்குழு இக்கூட்டத்தில் பின்கண்டவர்களைக் கொண்ட மாநாட்டு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. தலைவர் : சி. முருகேசன், பொருளாளர் : த. மணிவண்ணன் : துணைத் தலைவர்கள்: பொதுச் செயலாளர்கள் 1. ந.மு. தமிழ்மணி, 2. பி. வரதராசன், 3. வீ. இறையழகன், 1. பேரா. அறிவரசன், 2. இறையெழிலன், 3. தமிழமல்லன், 4. மாநாட்டினை 2016 ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் இருநாட்கள் தஞ்சையில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. தமிழர் விருந்து அன்று இரவு 7 மணிக்கு பேராசிரியர் மதுரை சந்திரன் அவர்களின் நாட்டுப்புறப்பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு இரவு 8 மணி அளவில் தமிழர் விருந்து நடைபெற்றது. சாதி, சமய, அரசியல் வேறுபாடு இல்லாமல் திரளாக அனைவரும் கலந்து கொண்டு விருந்துண்டு மகிழ்ந்தனர். |