இடிக்கப்படுகிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ. நெடுமாறன் அறிவிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 13 நவம்பர் 2013 08:57

இடிப்புக்கு முன்முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று (13-11-2013) அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இப்படத்தில் காணப்படும்

நீரூற்று வரை வந்து அதையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்ட காவல்துறையினர் அதற்குள் தோழர்கள் கூடியதால் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியுள்ளனர். ஆனால் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர். “சட்டவிரோதமான முறையில் முற்றத்தில் எதுவும் அமைக்கப்படவில்லை. சட்ட ரீதியாகவே எதிர்கொள்வோம். அனைத்துத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும்” என பழ. நெடுமாறன் அறிவிப்பு.

Idippu1

Idippu2

Idippu3

Idippu4

Idippu5

Idippu6

Idippu7

Idippu8

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.